Category Archives: சிறுகதை

மையம்

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து விட்டு சமையலை ஆரம்பிப்பது என்பது, அவன் விழிக்கும்போது ஈரத்தலையில் கூந்தல் தழையத் தழைய, அந்த சந்தன முகத்தில் சற்றுக் கூடுதலாக மஞ்சளும், நெற்றியில் விபூதிக் கீற்றுடன் குங்குமமும். லேசான சிரிப்புடன் “ம்ம் எந்திரிங்க… நேரமாச்சு” என்று சொல்ல வேண்டும் என்பதும் அவள் தனக்காக விதித்துக் கொண்ட நியதி. இந்த ஒரு வருடமாக அதைச் செய்ய அவள் தவறவிட்டதே இல்லை; அவன் அங்கு இல்லாத காலைப் பொழுதுகளைத் தவிர. ஆனால் ஆறுமணி வாக்கில் அவன் புரண்டு படுக்கையில், கையை வீசிப் போடுகையில் அவளின் இடத்தில் அவள் இல்லாதிருப்பதால் அவனும் விழித்துக் கொள்ளலாம், ஏதாவது எரிச்சலோடு முணங்கி விட்டு புரண்டு படுத்துக் கொண்டு மீண்டும் உறங்கிப் போகலாம், மடார் மடார் என்று தண்ணீர் ஊற்றி அவள் குளிக்கும் சப்தத்தில் இன்னும் கொஞ்ச நேரத்தில் சோப்பும் மஞ்சளும் கலந்த நறுமணத்தோடு குறுக்காக மட்டும் கட்டியிருக்கும் ஈரச்சேலையோடு வனப்பாக அவள் வரலாம் எனக் காத்திருந்துவிட்டு எழலாம்.
Continue reading மையம்

திரைகடலோடி

“இன்னிக்கு எப்படியும் ரெண்டுல ஒன்னு பார்த்தரணும்… ஆமா” மணிராசு தீர்மானித்துக் கொண்டான்.

“இன்னும் எத்தன நாளைக்கு இந்த வூர்ல இந்த சீரழிந்த பொழப்பு…”

மனமும் வாழ்வும் கசந்தது.

சிந்தனையைச் சற்று நிறுத்திவிட்டு சாலையைப் பார்த்தான்.

எதையுமே பொருட்படுத்தாது அசுர வேகத்தில் கடந்து செல்லும் வாகனங்களைப் பார்த்தான்.

Continue reading திரைகடலோடி

சுருதி பேதம்

கடைசியாக ஒரு முறை ‘திரு கனகசபாபதி – தலைமை ஆசிரியர்’ என்றிருந்த அந்த பெயர் பலகையை கண் நிறைய பார்த்துக் கொண்டேன். கண்களின் விளிம்பில் ஈரம் கசிகிறது.

இந்த பள்ளி ஆசிரியர் வாழ்க்கைதானே எனக்கு வாய்த்தது. எனது வாழ்வின் அர்த்தங்களை இங்கேதானே ஓடி ஓடி தேடினேன். காலையிலிருந்து இரவு வரை என் காலங்கள் இங்கேதானே கரைந்தது. ஐந்து வயதில் மாணவனாக நுழைந்து ஐம்பத்தி ஐந்து வயதில் தலைமை ஆசிரியனாக வெளியேறும் வரை என் இளமையும் முதுமையுமான இந்த வாழ்வு இந்த பள்ளிக்கூடங்களைச் சுற்றி சுற்றியேதானே வளர்ந்து, வாழ்ந்து தேய்ந்துள்ளது. மனைவி மக்களற்ற வீட்டில் கழித்த நேரங்களைக் காட்டிலும் இந்த கல்விக் கூடங்களில் வசித்த பொழுதுகள்தானே அதிகம்.
Continue reading சுருதி பேதம்

கலகக்காரன்

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் நீயூரோ வார்ட் தன் காலை ஏழரை மணிக்கான சுறுசுறுப்புடன் இயக்கம் கண்டது.

எந்த நேரத்திலும் நியூரோசர்ஜன் டத்தோ டாக்டர் அறு வந்துவிடுவார்.

தாதிகளின் நடையில் ஒரு வேகம்.

Continue reading கலகக்காரன்

நடப்பு

கம்போங் தேசாவின் மற்றைய இல்லங்கள் அந்த நடுநிசியில் துயில் கொண்டிருந்தன. அந்தச் சிறிய வீட்டில் மட்டும் மனித ஆரவாரம் வழக்கத்திற்கும் மாறாக சற்று அதிகமாகவே இருந்தது. தொலைக்காட்சி பெட்டியின் முன்பாக ஐந்தாறு சிறுவர் சிறுமிகள் சற்று நெருக்கமாகவே அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி நடுநாயகமாய் ஒரு ஈஸி சேரில் பாச்சிஹசான் மடியில் தன் பேரனுடன் அமர்ந்திருந்தார். இருமருங்கும் நாலைந்து ஆண்களும் பெண்களுமாக உட்கார எது தோதாகக் கிடைத்ததோ அதையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக அமர்ந்துகொண்டிருக்க, தொலைக்காட்சிப் பெட்டி ஜகார்த்தாவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நெடுந்தூர நடைப்போட்டியை நேரிடையாக அஞ்சல் செய்து கொண்டிருந்தது.
Continue reading நடப்பு

தரிசனம்

சிலை சிரிக்குமா என்ன ?

“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ணராஜ தஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம் லஷ்மீம் ஜாத வோதோ மாஆ – வஹ தாம் ம ஆவஹ..”

மந்திர சுலோகங்களை வாய் உச்சரிக்க, கைகள் வெங்கலக் குடத்தைக் கவிழ்க்க, நீர் அருவியாய்க் கொட்ட, அர்ச்சகர் மனம் மட்டும் எங்கோ, எதிலோ அலை பாய்வதை அறிந்து கொண்டவள் போல் முறுவலித்து நின்றாள் அம்மன்.

Continue reading தரிசனம்

மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்

முனியாண்டிக்கு மிதப்பது போலிருந்தது, அந்தப் புதிய கப்பல் போன்ற ‘எஸ்’ சீரியஸ் மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச் செல்வதால் மிதப்பது போல் உணர்வது இயல்புதானே. அதன் இருக்கைகளின் தோலுறைகள் ஒரு விதமான சுகந்த வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தன. Continue reading மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்

அவள் – நான் – அவர்கள்

சற்று தூரத்தில் துர்க்காபாய் மூச்சிரைக்க நடந்து வருவது தெரிந்தது. ஏழாம் நம்பர் குழந்தைகளுக்கான வார்டின் ஆயம்மா அவள். வெள்ளை சேலையில் கைகளில் கேஸ் கட்டுகளுடன் கனத்த உடலில் ஊளைசதையும், தளர்ந்த மார்பகங்களும் குலுங்க கையைத் தூக்கி ஆட்டியவண்ணம் என்னை நோக்கித்தான் வந்துக் கொண்டிருக்கிறாள்.

Continue reading அவள் — நான் — அவர்கள்

தவிப்பு

அகிலா என்ற அகிலாண்டேஸ்வரிக்கு இன்றைக்கு நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. சரக்… சரக் என்று தரையில் தேய்த்து நடக்கும் மாமாவின் கால் செருப்பின் சப்தம்தான் அதற்குக் காரணம். சப்தம் நின்று அவர் அவரது அறைக்கதவை திறக்கும் போது, அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. வயிற்றைப் புரட்டியது. மேஜையில் குனிந்து வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த அவளின் உள்ளங்கை வியர்வையில் பேனா வழுக்கியது. நோட்டுப் புத்தகத்தின் தாள் ஈரமானது. மாமா இந்நேரம் தன் பேண்ட்டை கழற்றிப் போட்டு விட்டு கைலியில் நுழைந்திருப்பார். Continue reading தவிப்பு