All posts by மா. சண்முகசிவா

தரிசனம்

சிலை சிரிக்குமா என்ன ?

“ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ணராஜ தஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம் லஷ்மீம் ஜாத வோதோ மாஆ – வஹ தாம் ம ஆவஹ..”

மந்திர சுலோகங்களை வாய் உச்சரிக்க, கைகள் வெங்கலக் குடத்தைக் கவிழ்க்க, நீர் அருவியாய்க் கொட்ட, அர்ச்சகர் மனம் மட்டும் எங்கோ, எதிலோ அலை பாய்வதை அறிந்து கொண்டவள் போல் முறுவலித்து நின்றாள் அம்மன்.

Continue reading தரிசனம்

முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்

முள் கிரீடம் அணிந்திருக்கும் நீண்ட நெடுஞ்சுவர்கள் எப்போதும் ஏதோ ஒரு விதமான உணர்வுகளையே கிளர்த்தெழச் செய்யும். சிறைச்சாலையின் மதில்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது ஒரு பயம் கலந்த கற்பனையைக் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கும். உள்ளே இருக்கும் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஒரு தீராத தவிப்பு, ஆழமான இரணம், தனக்கான நியாயங்களுடன் கூடிய ஒரு கதை கனன்று கொண்டிருக்கும்.

Continue reading முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்

கரிக்கும் உப்பின் அளவு ஒன்றுதான்

கொள்கை முழக்கங்களிலேயே அதி வசீகரமானது ‘வறுமை ஒழிப்பு’ என்பதுதான். இந்த அழகிய வார்த்தைகளை உச்சரிக்காத அரசியல் தலைவர்களின் உதடுகள் இல்லை, எழுத்தில் பிரகடனப்படுத்தாத தேர்தல் அறிக்கைகளோ, பொருளாதார கொள்கை முழக்கங்களோ இல்லை.

Continue reading கரிக்கும் உப்பின் அளவு ஒன்றுதான்

மெய்பொருள் காண்பது அறிவு

யு.பி.எஸ்.ஆர் எனும் ஆறாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 917 ஜோடி கண்களில் வெற்றிக் களிப்பையும் பல்லாயிரக்கணக்கான கண்களில் கவலை, சோகம், விரக்தி, தோல்வி, ஏமாற்றம் என்ற எண்ணற்ற எதிர்மறை உணர்வுகளையும் எழுதிச் சென்றது. ஆண்டு தோறும் நடந்தேறும் நாடகம்தான் இது.

Continue reading மெய்பொருள் காண்பது அறிவு

“சிறுகதைகளில் ‘கருத்துக்களை’ச் சொல்லலாமா?”

“இல்லை கருத்துக்களைச் சொல்ல சிறுகதை வடிவத்தை தேர்வு செய்யாதீர்கள். சிறுகதை கருத்துக்களைச் சொல்ல உண்டான இலக்கிய வகை இல்லை. கருத்துக்களை கட்டுரையில் சொல்லுங்கள்”.

இது பாலபாடம்.

கேட்டவர்: திரு.ரெ.சண்முகம்
பதிலளித்தவர்: திரு. பிரபஞ்சன்

Continue reading “சிறுகதைகளில் ‘கருத்துக்களை’ச் சொல்லலாமா?”

மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்

முனியாண்டிக்கு மிதப்பது போலிருந்தது, அந்தப் புதிய கப்பல் போன்ற ‘எஸ்’ சீரியஸ் மெர்சிடிஸ் பென்ஸை ஓட்டிச் செல்வதால் மிதப்பது போல் உணர்வது இயல்புதானே. அதன் இருக்கைகளின் தோலுறைகள் ஒரு விதமான சுகந்த வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தன. Continue reading மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்

கரை மீறும் அலைகள்

“எல்லாமே நமக்கு இங்கு சரியாத்தானே இருக்கு. நீங்க ஏன் எப்பவும் ஏதோ இந்த இனம் ஒரு சமூக நெருக்கடியிலேயே இருக்கிற மாதிரி பேசுறீங்க” என்று என்னைப் பார்க்கும் போதேல்லாம் அங்காலாய்ப்பார் சமூகத்தின் மேல்தட்டில் சௌகரியமாக வாழும் நண்பர் ஒருவர். இந்த நெருக்கடியை ஏன் இவர்கள் உள்வாங்கிக் கொள்ளமுடியவில்லை என்ற விந்தையும் வேதனையும் இதனை எப்படியெல்லாம் நமது படைப்புகள் பேச வேண்டும் என்ற சிந்தனையும்தான் என்னை அலைக்கழிக்கும். Continue reading கரை மீறும் அலைகள்

முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்

முள் கிரீடம் அணிந்திருக்கும் நீண்ட நெடுஞ்சுவர்கள் எப்போதும் ஏதோ ஒரு விதமான உணர்வுகளையே கிளர்த்தெழச் செய்யும். சிறைச்சாலையின் மதில்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது ஒரு பயம் கலந்த கற்பனையைக் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கும். உள்ளே இருக்கும் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஒரு தீராத தவிப்பு, ஆழமான இரணம், தனக்கான நியாயங்களுடன் கூடிய ஒரு கதை கனன்று கொண்டிருக்கும். Continue reading முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்

அவள் – நான் – அவர்கள்

சற்று தூரத்தில் துர்க்காபாய் மூச்சிரைக்க நடந்து வருவது தெரிந்தது. ஏழாம் நம்பர் குழந்தைகளுக்கான வார்டின் ஆயம்மா அவள். வெள்ளை சேலையில் கைகளில் கேஸ் கட்டுகளுடன் கனத்த உடலில் ஊளைசதையும், தளர்ந்த மார்பகங்களும் குலுங்க கையைத் தூக்கி ஆட்டியவண்ணம் என்னை நோக்கித்தான் வந்துக் கொண்டிருக்கிறாள்.

Continue reading அவள் — நான் — அவர்கள்

மீண்டு எழுவேன் நான் – (ஒரு அமெரிக்க கறுப்பின பெண்ணின் விடுதலைக் கவிதை)

மூலம் : மாயா ஏஞ்சிலோ | மொழிப்பெயர்ப்பு : மா. சண்முக சிவா

வரலாற்றின் புழுத்துப்போன பக்கங்களில்
விசும்பி அழும்
உண்மைகளின் குரல்வளையை நெரித்து
உனக்கான பொய்களை, புனைவுகளை
அதன் ஒப்பனைகளோடு
நீயே எழுதிக் கொள். Continue reading மீண்டு எழுவேன் நான் — (ஒரு அமெரிக்க கறுப்பின பெண்ணின் விடுதலைக் கவிதை)